- Get link
- X
- Other Apps
Posts
Showing posts from May, 2020
குறுங்கதை:1
- Get link
- X
- Other Apps
செந்திலுக்கு சொக்குவின் பேரில் கடுமையான கோவம்.சொக்கு வரட்டுமென்று அந்த ஓவல் டாப் கண்ணாடி உணவு மேசை மீது அமர்ந்து, அந்த இடைவெளியில் தனது முகநூல் பக்கத்தில் அந்த நடிகை தனது தொடைமேல் தனது இன்னொரு தொடைபோட்டு இருந்த புகைப்படத்தை பற்றிய தமிழக இளைஞர்களின் கருத்துக்களை படித்துக்கொண்டிருந்தான்.எல்லோருமே அந்த நிறத்தைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது.அதைவிட பெரும்பாலும் எல்லோரும் நிறத்தை சரியாகவே சொல்லி இருந்தனர்கள் என்பது பேராச்சர்யம்..ஒருவன் மட்டும் தான் ஆட்டுமந்தை இல்லை என நிரூபிக்க அது மஞ்சள் என்றான். செந்திலும் ஒருமுறை தன் இரு விரல்களால் விரித்துப்பார்த்து(தொடுதிரையை) மஞ்சள் என சொன்னவனை திட்டிக்கொண்டான்.அந்நேரம் வந்த சொக்குவிடம் மஞ்சள்காரன் மேலிருந்த கோவத்தை காட்டினான். இங்கே இருப்பது நானும் நீயும்.நீயோ ஆண்.நான் அதைவிட ஆண்.அப்படி இருக்கும்போது ஏன் அப்படி செய்தாய்?நாம் ஏற்கனவே பேசி வைத்துள்ளோம் அல்லவா...’நான் யார்’ என்பதை தேடும் விசப்பரிட்சையில் இந்த ஆறு மாதமும் இருக்கிறோம் என்ற நினைப்புகூட இல்லாமல் ஏன் அப்படி செய்தாய்?ஜனவரி ஒன்று பிறக்கும் முன்னேயும்,பிறந்த பின்பும் கத்தி கத்...
குறுங்கதை:
- Get link
- X
- Other Apps
செந்தில் அந்த மளிகைக்கடை கொட்டாரத்துக்குள் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சமயம்தான் வெளியில் நின்ற பழைய பேப்பர்க்காரன் உள்ளிருக்கும் கடைக்காரனிடம் சொல்லிக்கொண்டான். “குணசேகர் செத்துட்டானாம்ல ஆக்சிடண்ட்ல...” குனிந்து இமிளியை(கஸ்டமர் அப்படித்தான் கேட்டான்)அள்ளியவன் நிமிர்ந்து ‘எந்த குணசேகர்?’ என்றான்.வெளியில் நின்ற பேப்பருக்கு வெய்யில் அதிகம்.உள்ளே நுழைந்தவாறு ‘உச்’ கொட்டிக்கொண்டே சொன்னான்.செந்தில் முதலில் அந்த ‘உச்’ வெயிலுக்கு என நினைத்தான்.பின்பு செத்துப்போன குணசேகரை தெரியாமல் இருக்கிறானே இவன்- என அலுத்துக்கொண்டதாக நினைத்தான். “கொளத்துகிட்ட கட...மணி இல்ல...அவன் தம்பிப்பா...குடும்பத்தோட காரில் போயிருக்கான்...” கடைக்காரனுக்கு ஆள் யாரென இப்போதும் சரியாக பிடிபடவில்லை.புளி இன்னும் கையில் இருப்பதை கண்டு இப்போது செந்தில் அந்த வாடிக்கையாளரை வேடிக்கை பார்த்தான்.அவன் வாய் ஏன் இன்னும் ‘உச்’ சொல்லவில்லை என நினைத்தான். அந்த வழுக்கையா ஒரு பயன் இருப்பானே...அவனா? “வழுக்கையான்னு சரியாய் தெரியல...ஓங்கடக்கு கூட அட்டபொட்டி எடுக்க வரமாட்டான் மணி அவன் தம்பிப்பா...”என சொல்லிவிட்டு ‘உச்’ என்றான் பேப்ப...
ஸ்கிரிப்ட் !
- Get link
- X
- Other Apps
ஸ்கிரிப்ட் மாதி நினைத்து படிக்கவும்! ------------------------------------------------------------- அம்மா உணவகம் மாதிரியான தோற்றத்தை உடைய ஒரு ஹோட்டல். நேரம் மூன்று மணி / சாப்பாடு தீரப்போகிற நேரம்,அதை உணர்த்தும் விதமாய் டேபிளின் மேல் சேரைப்போட்டுக்கொண்டிருக்கும் சர்வர். அப்பாவும் மகனும் நுழைகிறார்கள். அப்பன்: ஓட்டலுக்கு பேரக்கூட காணாமுடா... மவன்: பெருவச்சா அம்பது ரூவா சோறு...பரவால்லையா... வாயை மூடுதல்போல் செய்கை காட்டிக்கொண்டு அப்பா நுழைகிறார். “சோறு இருக்கா”என கேட்டுக்கொண்டே நுழைகிறான் மகன். சர்வர்: ‘சாப்பாடு அறுவது ரூவா...கூட்டு,பொரியல்,ரசம் தீர்ந்துபோச்சு..அதனால அம்பது..எல(இலை) போடவா?’ சொல்லிவிட்டு ஒருஏளனப்பார்வை வீசிவிட்டு மீதமிருந்த ஒரு ஸ்டூலையும் தூக்கி போடும் சர்வர். ஸ்டூல ஏறக்குப்ப்பா...என்ற படி மகனை முறைக்கும் அப்பா... ‘ஓட்டலுக்கு பேரு வச்சா அம்பது லூவாய்க்கு தள்ளுராங்கலாம்...’முணுமுணுக்கும் அப்பாவின் காதோரம் வந்து மகன்... “அப்பா...நமக்கு என் இந்த பொழப்பு...பேசாம என்னை நீ கவுருமென்ட் வாத்தியார் வேலைக்கு படிக்கவச்சிருக்கலாம்ல...அஞ்சி நா வேல(ஐந்து நாள் வேலை)ரெண்டு நா ஜல்சா...பொண்ண...
Fuck off
- Get link
- X
- Other Apps
கல்யாணமான பெண் தன் அம்மாவுடன் போனில் பேசிக்கொண்டிருக்கிறார்.அம்மா பாத்திரம் கழுவிக்கொண்டே ஒரு காதை சாயவிட்டு கதைக்கிறாள். தவறி அம்மாபாத்திரம் சிங்க்கை சிட்டு தரையில் சிதறுகிறது.அந்த நொறுங்கல் கேட்டு மகள் இந்த பக்கமிருந்து சொல்கிறாள். "ஓடைய்ங்க கழுதய..." அம்மா சொல்கிறாள். "ஒடயட்டும் கழுத..." மகளுக்கும் அம்மாவுக்குமான அழகான ஒரு பாத்திரவியல் அது. நாம் அவ்வப்போது சொல்வோமே ஏதேனும் ஒரு வெறுப்பு கலந்த ஒரு சுகந்த நேரங்களில் "fuck off" என்று. அது மாதிரி.
வாட்ஸ் அப் குரூப் குறுங்கதை.
- Get link
- X
- Other Apps
அப்போதுதான் அந்த குழுவில் சேர்ந்தான் இரவி.அந்த குழுவிற்கு 'எங்கள் குடும்பம்' என பெயரிட்டிருந்தார்கள்.குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அதில் இணைய அனுமதிக்கப்பட்டார்கள்.நிறைய பெண்களும் குறைவான ஆண்களும் அதில் இணைந்திருந்தார்கள்.அந்த ஆண்கள் குழுவில் கூட அப்பெண்களை பாதுகாத்துக்கொண்டிருந்தார்கள். தினந்தோறும் காலையில் வணக்க புகைப்படங்கள் வந்துகொண்டே இருந்தது இரவிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.இதற்கு தீவிர முடிவு கட்ட எண்ணி களத்தில் தானே குதித்தான். இரவி:காலை வணக்கம், இரவி:இனிய காலை வணக்கங்கள், இரவி:நட்பூ வணக்கம், இரவி:இனிய உதயமாகின்ற இந்த காலை நம் வாழ்வில் நலம் சேர்க்கட்டும் கூடவே ரோசாப்பூ படம். இவ்வாறாக தன்னை குழுவுடன் இணைத்துக்கொண்டு தன் கோவத்தை மாற்றிவிட்டான் கில்லாடி இரவி.இவனின் இந்த தீவிரத்தை புரிந்துகொண்ட சகாக்கள் தங்களின் நிலையை கொஞ்சமாய் மாற்றிக்கொண்டு மாலை வணக்கத்திற்கு சென்று விட்டார்கள்.ஆனால் இரவி மாலையில் என்ன நடக்கிறது என்பதை பெரும்பாலும் பார்ப்பதில்லை.காரணம் அவனுக்கு பெரும் குடி பழக்கமும் குறைவான வேகமுள்ள இணையமும் இருந்தது.அதனால் அங்கே சமநிலை தவறியது. பதிவிறக்கம் செய்ய நீண்ட ந...
Death stories 2
- Get link
- X
- Other Apps
மரண வீட்டின் புனிதம் கெடாமலிருக்க அன்று முழுதும் அருகிலிருந்த கோவிலைப்பூட்டினார்கள் ! ----------------------------------------- செத்துப்போன மகன் பயன்படுத்திய கேரம்போர்டை அப்பா கல்லால் அடித்து நொறுக்கும்போது புரிந்துகொண்டேன் அவருக்கு இன்னொரு மகன் இல்லை என! ------------------------------------------------ இறந்தவனின் வீட்டு வெளியில் கிடக்கும் பிளாஸ்டிக் நாற்காலியில் வாகாக உட்கார்ந்து கொண்டு அவனை பற்றி பேசுதல் அவ்வளவு சுகமானது. தான் வாழ்ந்து கொண்டிருப்பதை நுகர்தல் அது.அப்ப வயிற்றுபசி பிச்சி எடுக்கும் பாருங்க! ------------------------------------------------ பாடையின் பக்கத்தில் உட்கார்ந்து அழுபவர்களின், குறிப்பாய் பெண்களின் மூக்கிலிருந்து வழியும் நீரை குறிப்பெடுப்பவன் தான் உண்மையான மரணவாசி ! ------------------------------------------------- இதுவும் கடந்து போகும் என்பதெல்லாம் ஜஸ்ட் மரணம் அடைந்தவனுக்கு இல்லல்ல...
Death Stories 1
- Get link
- X
- Other Apps
சாவ விசாரி என்றார்கள். எப்படி விசாரிப்பது என தெரியவில்லை. எப்ப செத்தான்?என கேட்க வேண்டும் கூடவே எப்படி எனவும் என தீர்மானித்தேன். சென்றேன். செத்தவனின் அப்பா வீட்டில் இருந்தார். முகத்தை இன்னும் சோகமாக்கிக்கொண்டேன். அவர் என்னை விட... அடையாளம் தெரியவில்லை 'வாங்க சார்' என்றார். இன்சூரன்ஸ்காரன் என நினைத்திருக்கலாம். என்னை அறிமுகப்படுத்திய பின் தோளில் கை வைத்தார். விட்டு போயிட்டான் என கூறி அழுக முற்பட்டார். அவ்வளவாக முடியவில்லை ஏழெட்டு நாள் ஆகியிருந்தது. அவரே எல்லாமே சொன்ன படியால் என் கேள்விகளை கேட்க முடியாமல் போனது. மேலும் அங்கே எப்படி உடல் பாவனைகள் செய்வது என்பதும் தெரியாமல் தடுமாறினேன். எப்படி தேற்றுவது? ஏன் தேற்றனும்? தேற்றித்தான் என்ன? என இத்தனை மசிறு கேள்விகளுக்கு செத்தவனின் அப்பாவே விடையாயிருந்தார்.
சமத்து
- Get link
- X
- Other Apps
சமத்து என்ற சொல் சாமர்த்தியம் என்பதிலிருந்து சுருக்கப்பட்டதா?எனத்தெரியவில்லை.ஒருவேளை இருக்கக்கூடும்.ஏனெனில் சமத்து என்பது பேச்சு வழக்கு.சமர்த்து என்பதுதான் முழுச்சொல். இந்த பதத்தை ஏன் குழந்தைகளுக்கு மட்டும்-முக்கியமாய் அடம்பிடிக்குமோ எனக்கருதப்படும் குழந்தை நபர்களுக்கு மட்டும் உபயோகிக்கிறோம். ஒய் நாட் பார்... சமத்தா செத்துப்போயிரு தாத்தா... ஹே...நல்ல புள்ளல்ல..சமத்துப்புள்ளல்ல...வேமா வயசுக்கு வந்துரும்மா... சமத்துப்புள்ள ...வட்டிக்காச டயத்துக்கு கொடுத்துருப்பா... டேய்...நீ நல்ல சமத்தா இருந்தா அந்த கக்கூஸ் அடப்ப டக்குன்னு எடு பாக்கலாம்!
FB Posts.
- Get link
- X
- Other Apps
எப்போதும் பயன்படுத்தும் வலக்கையை மாற்றி முகம் கழுவுகையில் ஒரு புதிய முகம் மாட்டியது இடக்கைக்கு. ஜலதோசக்காரனின் மூக்கைப்போலத்தான் ஆகிவிடுகிறது வாழ்வு அவ்வப்போது எதிலும் மணமற்று. வயது 'வந்துவிட்டேன்' என்னும்போது பெண்ணுக்கும்,'ஆகிவிட்டது' என்னும்போது ஆணுக்கும் பதற்றம் வந்துவிடுகிறது கோயிலுக்குப்போனோம்,தேங்காய் உடைத்தோம் , ஊதுபத்தி ஏற்றினோம் என்றே நல்ல வாழ்க்கை வாழ்ந்துவிடுகிறார்கள் சிலர்! வாழ்வு ஒரு உலர்திராட்சை போன்றதே.ஸ்ருதியேயற்ற சில மெல்லுதலுக்கு பிறகே கொஞ்சமாய் சுவை தெரிகிறது.அதுவே பின்பு விழுங்குகையில் சக்கையாக மாறுகிறது. அப்போது சிரிப்பதெற்க்கென புது இசையை செய்துகொண்டிருந்தாள். இன்றைய நாள் முடியும்முன்பே நாள்காட்டி தாளை கிழித்து எறிவதில் ஒரு வெறுப்பானந்தம். சோக மூஞ்சி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்! ஒரு தீப்பெட்டிக்குள் வசிக்க ஆசை இருக்கு குச்சிகளை அள்ளி தூர வீசிவிட்டு.
MISERY OF DEBT (கடன்-டிட் பிட்ஸ் )
- Get link
- X
- Other Apps
கடன் கொடுத்த நபர் அதிகாலையில் நம் வீட்டிற்க்கு வந்து டீடிபன் சாப்பிட்டு கிளம்பும்போது 'பணம்லாம் திருப்பித்தர வேணாம்,பாத்துக்கலாம் ' என சொல்லிச்சொல்லும்போது அப்படியே ஒரு அய்யாயிரம் கடன் வாங்கிய சுகம்! கடன் பெரும்பாலும் கடன்காரர்களிடமே வாழ்கிறது. கடன் படாதோர் நெஞ்சம்போல் கலங்கிக்கொண்டிருந்தான் இலங்கை வேந்தன் இன்று! திவாகருக்கு கடன் கொடுத்திருந்தேன்,வராக்கடன் ஆகிவிட்டிருந்தது.சில காலங்களுக்குப்பின் அவன் ராமநாதனுக்கு கடன் கொடுத்ததாய் அறிந்தேன்.என் கடனை இராமநாதன் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு திவாகர் இப்போது சொல்கிறான்.நான் இனி ராமனாதன் வசம் திவாகர் கடனை பெற்றுக்கொண்டு எனக்கும் திவாகருக்கும் உண்டான கடனை தீர்த்துக்கொள்ளவேண்டும்.ராமநாதன் கூட என்னுடன் வந்து திவாகர் கணக்கை சரிசெய்ததாய் ஒப்புதல் வாங்க வேண்டும்.திவாகர் கடன் வாங்கினாலும் ராஜாதான்.
- Get link
- X
- Other Apps
ஹெல்மெட்டுக்குள் எனக்கென தனி வீடு உள்ளது.அதில் பிடித்த பாடல் ஒன்று சத்தமாய் என்னால் இசைக்கப்படும், அந்த வீட்டின் சுவற்றினில் வேகமாக காற்றை ஊதி என் வாய் நாற்றம் அறியப்படும். கருப்பு கண்ணாடி எனில் இன்னும் வசதி அதிகம்.சூழ்நிலைகேற்ப முகபாவனைகள் செய்யப்படும். கதவை லேசாக திறந்து மூக்கை நோண்டலாம்,நேத்து சிக்கிய மாம்பழ நாரை கடவாய் பல்லிளிருந்து எடுக்கலாம்.யாருக்கும் தெரியாது. மழை நாட்களில் உள்ளே கும்மியே அடிக்கலாம். எதையோ மறந்து சடக் என முன்னால் நிற்பவன்,பறக்கும் தூசி,கார்ப்பரேஷன்,கழிவு நீர்,மெதுவாய் கொட்டையை சொரிந்துகொண்டு நடு ரோட்டில் ஓட்டும் டிவிஎஸ்காரன் என நினைக்கும் அனைத்தையும் கெ(கொ)ட்ட வார்த்தைகளால் திட்டலாம்.இருட்டுக்குள் இருந்து கொண்டு விளக்கெரிந்து கொண்டிருக்கும் எதிர் வீட்டுக்காரனின் பாத்ரூமை பார்ப்பது போல் அவ்வளவு ஒரு சுகம் மற்றும் பாதுகாப்பு அந்த வீடு.