FB Posts.


  • எப்போதும் பயன்படுத்தும் வலக்கையை மாற்றி முகம் கழுவுகையில் ஒரு புதிய முகம் மாட்டியது இடக்கைக்கு.


  • ஜலதோசக்காரனின் மூக்கைப்போலத்தான் ஆகிவிடுகிறது வாழ்வு அவ்வப்போது எதிலும் மணமற்று.

  • வயது 'வந்துவிட்டேன்' என்னும்போது பெண்ணுக்கும்,'ஆகிவிட்டது' என்னும்போது ஆணுக்கும் பதற்றம் வந்துவிடுகிறது

  • கோயிலுக்குப்போனோம்,தேங்காய் உடைத்தோம் , ஊதுபத்தி ஏற்றினோம் என்றே நல்ல வாழ்க்கை வாழ்ந்துவிடுகிறார்கள் சிலர்!

  • வாழ்வு ஒரு உலர்திராட்சை போன்றதே.ஸ்ருதியேயற்ற சில மெல்லுதலுக்கு பிறகே கொஞ்சமாய் சுவை தெரிகிறது.அதுவே பின்பு விழுங்குகையில் சக்கையாக மாறுகிறது.

  • அப்போது சிரிப்பதெற்க்கென புது இசையை செய்துகொண்டிருந்தாள்.
  • இன்றைய நாள் முடியும்முன்பே நாள்காட்டி தாளை கிழித்து எறிவதில் ஒரு வெறுப்பானந்தம்.
  • சோக மூஞ்சி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!
  • ஒரு தீப்பெட்டிக்குள் வசிக்க ஆசை இருக்கு குச்சிகளை அள்ளி தூர வீசிவிட்டு.

Comments

Popular posts from this blog

MISERY OF DEBT (கடன்-டிட் பிட்ஸ் )

Death Stories 1

சமத்து