Death Stories 1
சாவ விசாரி என்றார்கள்.
எப்படி விசாரிப்பது என தெரியவில்லை.
எப்ப செத்தான்?என கேட்க வேண்டும் கூடவே எப்படி எனவும் என தீர்மானித்தேன்.
சென்றேன்.
செத்தவனின் அப்பா வீட்டில் இருந்தார்.
முகத்தை இன்னும் சோகமாக்கிக்கொண்டேன்.
அவர் என்னை விட...
அடையாளம் தெரியவில்லை 'வாங்க சார்' என்றார்.
இன்சூரன்ஸ்காரன் என நினைத்திருக்கலாம்.
என்னை அறிமுகப்படுத்திய பின் தோளில் கை வைத்தார்.
விட்டு போயிட்டான் என கூறி அழுக முற்பட்டார்.
அவ்வளவாக முடியவில்லை ஏழெட்டு நாள் ஆகியிருந்தது.
அவரே எல்லாமே சொன்ன படியால் என் கேள்விகளை கேட்க முடியாமல் போனது.
மேலும் அங்கே எப்படி உடல் பாவனைகள் செய்வது என்பதும் தெரியாமல் தடுமாறினேன்.
எப்படி தேற்றுவது?
ஏன் தேற்றனும்?
தேற்றித்தான் என்ன?
என இத்தனை மசிறு கேள்விகளுக்கு செத்தவனின் அப்பாவே விடையாயிருந்தார்.
Comments
Post a Comment