Posts

குறுங்கதை:1

செந்திலுக்கு சொக்குவின் பேரில் கடுமையான கோவம்.சொக்கு வரட்டுமென்று அந்த ஓவல் டாப் கண்ணாடி உணவு மேசை மீது அமர்ந்து, அந்த இடைவெளியில் தனது முகநூல் பக்கத்தில் அந்த நடிகை தனது தொடைமேல் தனது இன்னொரு தொடைபோட்டு இருந்த புகைப்படத்தை பற்றிய தமிழக இளைஞர்களின் கருத்துக்களை படித்துக்கொண்டிருந்தான்.எல்லோருமே அந்த நிறத்தைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது.அதைவிட பெரும்பாலும் எல்லோரும் நிறத்தை சரியாகவே சொல்லி இருந்தனர்கள் என்பது பேராச்சர்யம்..ஒருவன் மட்டும் தான் ஆட்டுமந்தை இல்லை என நிரூபிக்க அது மஞ்சள் என்றான். செந்திலும் ஒருமுறை தன் இரு விரல்களால் விரித்துப்பார்த்து(தொடுதிரையை) மஞ்சள் என சொன்னவனை திட்டிக்கொண்டான்.அந்நேரம் வந்த சொக்குவிடம் மஞ்சள்காரன் மேலிருந்த கோவத்தை காட்டினான். இங்கே இருப்பது நானும் நீயும்.நீயோ ஆண்.நான் அதைவிட ஆண்.அப்படி இருக்கும்போது ஏன் அப்படி செய்தாய்?நாம் ஏற்கனவே பேசி வைத்துள்ளோம் அல்லவா...’நான் யார்’ என்பதை தேடும் விசப்பரிட்சையில் இந்த ஆறு மாதமும் இருக்கிறோம் என்ற நினைப்புகூட இல்லாமல் ஏன் அப்படி செய்தாய்?ஜனவரி ஒன்று பிறக்கும் முன்னேயும்,பிறந்த பின்பும் கத்தி கத்...

குறுங்கதை:

செந்தில் அந்த மளிகைக்கடை கொட்டாரத்துக்குள் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சமயம்தான் வெளியில் நின்ற பழைய பேப்பர்க்காரன் உள்ளிருக்கும் கடைக்காரனிடம் சொல்லிக்கொண்டான். “குணசேகர் செத்துட்டானாம்ல ஆக்சிடண்ட்ல...” குனிந்து இமிளியை(கஸ்டமர் அப்படித்தான் கேட்டான்)அள்ளியவன் நிமிர்ந்து ‘எந்த குணசேகர்?’ என்றான்.வெளியில் நின்ற பேப்பருக்கு வெய்யில் அதிகம்.உள்ளே நுழைந்தவாறு ‘உச்’ கொட்டிக்கொண்டே சொன்னான்.செந்தில் முதலில் அந்த ‘உச்’ வெயிலுக்கு என நினைத்தான்.பின்பு செத்துப்போன குணசேகரை தெரியாமல் இருக்கிறானே இவன்- என அலுத்துக்கொண்டதாக நினைத்தான். “கொளத்துகிட்ட கட...மணி இல்ல...அவன் தம்பிப்பா...குடும்பத்தோட காரில் போயிருக்கான்...” கடைக்காரனுக்கு ஆள் யாரென இப்போதும் சரியாக பிடிபடவில்லை.புளி இன்னும் கையில் இருப்பதை கண்டு இப்போது செந்தில் அந்த வாடிக்கையாளரை வேடிக்கை பார்த்தான்.அவன் வாய் ஏன் இன்னும் ‘உச்’ சொல்லவில்லை என நினைத்தான். அந்த வழுக்கையா ஒரு பயன் இருப்பானே...அவனா? “வழுக்கையான்னு சரியாய் தெரியல...ஓங்கடக்கு கூட அட்டபொட்டி எடுக்க வரமாட்டான் மணி அவன் தம்பிப்பா...”என சொல்லிவிட்டு ‘உச்’ என்றான் பேப்ப...

ஸ்கிரிப்ட் !

ஸ்கிரிப்ட் மாதி நினைத்து படிக்கவும்! ------------------------------------------------------------- அம்மா உணவகம் மாதிரியான தோற்றத்தை உடைய ஒரு ஹோட்டல். நேரம் மூன்று மணி / சாப்பாடு தீரப்போகிற நேரம்,அதை உணர்த்தும் விதமாய் டேபிளின் மேல் சேரைப்போட்டுக்கொண்டிருக்கும் சர்வர். அப்பாவும் மகனும் நுழைகிறார்கள். அப்பன்: ஓட்டலுக்கு பேரக்கூட காணாமுடா... மவன்: பெருவச்சா அம்பது ரூவா சோறு...பரவால்லையா... வாயை மூடுதல்போல் செய்கை காட்டிக்கொண்டு அப்பா நுழைகிறார். “சோறு இருக்கா”என கேட்டுக்கொண்டே நுழைகிறான் மகன். சர்வர்: ‘சாப்பாடு அறுவது ரூவா...கூட்டு,பொரியல்,ரசம் தீர்ந்துபோச்சு..அதனால அம்பது..எல(இலை) போடவா?’ சொல்லிவிட்டு ஒருஏளனப்பார்வை வீசிவிட்டு மீதமிருந்த ஒரு ஸ்டூலையும் தூக்கி போடும் சர்வர். ஸ்டூல ஏறக்குப்ப்பா...என்ற படி மகனை முறைக்கும் அப்பா... ‘ஓட்டலுக்கு பேரு வச்சா அம்பது லூவாய்க்கு தள்ளுராங்கலாம்...’முணுமுணுக்கும் அப்பாவின் காதோரம் வந்து மகன்... “அப்பா...நமக்கு என் இந்த பொழப்பு...பேசாம என்னை நீ கவுருமென்ட் வாத்தியார் வேலைக்கு படிக்கவச்சிருக்கலாம்ல...அஞ்சி நா வேல(ஐந்து நாள் வேலை)ரெண்டு நா ஜல்சா...பொண்ண...

Fuck off

கல்யாணமான பெண் தன் அம்மாவுடன் போனில் பேசிக்கொண்டிருக்கிறார்.அம்மா பாத்திரம் கழுவிக்கொண்டே ஒரு காதை சாயவிட்டு கதைக்கிறாள். தவறி அம்மாபாத்திரம் சிங்க்கை சிட்டு தரையில் சிதறுகிறது.அந்த நொறுங்கல் கேட்டு மகள் இந்த பக்கமிருந்து சொல்கிறாள். "ஓடைய்ங்க கழுதய..." அம்மா சொல்கிறாள். "ஒடயட்டும் கழுத..." மகளுக்கும் அம்மாவுக்குமான அழகான ஒரு பாத்திரவியல் அது. நாம் அவ்வப்போது சொல்வோமே  ஏதேனும் ஒரு வெறுப்பு கலந்த ஒரு சுகந்த நேரங்களில் "fuck off" என்று. அது மாதிரி.

வாட்ஸ் அப் குரூப் குறுங்கதை.

அப்போதுதான் அந்த குழுவில் சேர்ந்தான் இரவி.அந்த குழுவிற்கு 'எங்கள் குடும்பம்' என பெயரிட்டிருந்தார்கள்.குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அதில் இணைய அனுமதிக்கப்பட்டார்கள்.நிறைய பெண்களும் குறைவான ஆண்களும் அதில் இணைந்திருந்தார்கள்.அந்த ஆண்கள் குழுவில் கூட அப்பெண்களை பாதுகாத்துக்கொண்டிருந்தார்கள். தினந்தோறும் காலையில் வணக்க புகைப்படங்கள் வந்துகொண்டே இருந்தது இரவிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.இதற்கு தீவிர முடிவு கட்ட எண்ணி களத்தில் தானே குதித்தான். இரவி:காலை வணக்கம், இரவி:இனிய காலை வணக்கங்கள், இரவி:நட்பூ வணக்கம், இரவி:இனிய உதயமாகின்ற இந்த காலை நம் வாழ்வில் நலம் சேர்க்கட்டும் கூடவே ரோசாப்பூ படம். இவ்வாறாக தன்னை குழுவுடன் இணைத்துக்கொண்டு தன் கோவத்தை மாற்றிவிட்டான் கில்லாடி இரவி.இவனின் இந்த தீவிரத்தை புரிந்துகொண்ட சகாக்கள் தங்களின் நிலையை கொஞ்சமாய் மாற்றிக்கொண்டு மாலை வணக்கத்திற்கு சென்று விட்டார்கள்.ஆனால் இரவி மாலையில் என்ன நடக்கிறது என்பதை பெரும்பாலும் பார்ப்பதில்லை.காரணம் அவனுக்கு பெரும் குடி பழக்கமும் குறைவான வேகமுள்ள இணையமும் இருந்தது.அதனால் அங்கே சமநிலை தவறியது. பதிவிறக்கம் செய்ய நீண்ட ந...

Death stories 2

மரண வீட்டின் புனிதம் கெடாமலிருக்க அன்று முழுதும் அருகிலிருந்த கோவிலைப்பூட்டினார்கள் ! ----------------------------------------- செத்துப்போன மகன் பயன்படுத்திய கேரம்போர்டை அப்பா கல்லால் அடித்து நொறுக்கும்போது புரிந்துகொண்டேன் அவருக்கு இன்னொரு மகன் இல்லை என! ------------------------------------------------ இறந்தவனின் வீட்டு வெளியில் கிடக்கும் பிளாஸ்டிக் நாற்காலியில் வாகாக உட்கார்ந்து கொண்டு அவனை பற்றி பேசுதல் அவ்வளவு சுகமானது. தான் வாழ்ந்து கொண்டிருப்பதை நுகர்தல் அது.அப்ப வயிற்றுபசி பிச்சி எடுக்கும் பாருங்க! ------------------------------------------------ பாடையின் பக்கத்தில் உட்கார்ந்து அழுபவர்களின், குறிப்பாய் பெண்களின் மூக்கிலிருந்து வழியும் நீரை குறிப்பெடுப்பவன் தான் உண்மையான மரணவாசி ! ------------------------------------------------- இதுவும் கடந்து போகும் என்பதெல்லாம் ஜஸ்ட் மரணம் அடைந்தவனுக்கு இல்லல்ல...