கடன் கொடுத்த நபர் அதிகாலையில் நம் வீட்டிற்க்கு வந்து டீடிபன் சாப்பிட்டு கிளம்பும்போது 'பணம்லாம் திருப்பித்தர வேணாம்,பாத்துக்கலாம் ' என சொல்லிச்சொல்லும்போது அப்படியே ஒரு அய்யாயிரம் கடன் வாங்கிய சுகம்! கடன் பெரும்பாலும் கடன்காரர்களிடமே வாழ்கிறது. கடன் படாதோர் நெஞ்சம்போல் கலங்கிக்கொண்டிருந்தான் இலங்கை வேந்தன் இன்று! திவாகருக்கு கடன் கொடுத்திருந்தேன்,வராக்கடன் ஆகிவிட்டிருந்தது.சில காலங்களுக்குப்பின் அவன் ராமநாதனுக்கு கடன் கொடுத்ததாய் அறிந்தேன்.என் கடனை இராமநாதன் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு திவாகர் இப்போது சொல்கிறான்.நான் இனி ராமனாதன் வசம் திவாகர் கடனை பெற்றுக்கொண்டு எனக்கும் திவாகருக்கும் உண்டான கடனை தீர்த்துக்கொள்ளவேண்டும்.ராமநாதன் கூட என்னுடன் வந்து திவாகர் கணக்கை சரிசெய்ததாய் ஒப்புதல் வாங்க வேண்டும்.திவாகர் கடன் வாங்கினாலும் ராஜாதான்.
Comments
Post a Comment