Death stories 2
மரண வீட்டின் புனிதம் கெடாமலிருக்க அன்று முழுதும் அருகிலிருந்த கோவிலைப்பூட்டினார்கள் !
-----------------------------------------
செத்துப்போன மகன் பயன்படுத்திய கேரம்போர்டை அப்பா கல்லால் அடித்து நொறுக்கும்போது புரிந்துகொண்டேன் அவருக்கு இன்னொரு மகன் இல்லை என!
------------------------------------------------
இறந்தவனின் வீட்டு வெளியில் கிடக்கும் பிளாஸ்டிக் நாற்காலியில் வாகாக உட்கார்ந்து கொண்டு அவனை பற்றி பேசுதல் அவ்வளவு சுகமானது.
தான் வாழ்ந்து கொண்டிருப்பதை நுகர்தல் அது.அப்ப வயிற்றுபசி பிச்சி எடுக்கும் பாருங்க!
------------------------------------------------
பாடையின் பக்கத்தில் உட்கார்ந்து அழுபவர்களின், குறிப்பாய் பெண்களின் மூக்கிலிருந்து வழியும் நீரை குறிப்பெடுப்பவன் தான் உண்மையான மரணவாசி !
-------------------------------------------------
இதுவும் கடந்து போகும் என்பதெல்லாம் ஜஸ்ட் மரணம் அடைந்தவனுக்கு இல்லல்ல...
Comments
Post a Comment