ஸ்கிரிப்ட் !

ஸ்கிரிப்ட் மாதி நினைத்து படிக்கவும்!
-------------------------------------------------------------

அம்மா உணவகம் மாதிரியான தோற்றத்தை உடைய ஒரு ஹோட்டல்.
நேரம் மூன்று மணி / சாப்பாடு தீரப்போகிற நேரம்,அதை உணர்த்தும் விதமாய் டேபிளின் மேல் சேரைப்போட்டுக்கொண்டிருக்கும் சர்வர்.
அப்பாவும் மகனும் நுழைகிறார்கள்.

அப்பன்: ஓட்டலுக்கு பேரக்கூட காணாமுடா...

மவன்: பெருவச்சா அம்பது ரூவா சோறு...பரவால்லையா...

வாயை மூடுதல்போல் செய்கை காட்டிக்கொண்டு அப்பா நுழைகிறார்.
“சோறு இருக்கா”என கேட்டுக்கொண்டே நுழைகிறான் மகன்.

சர்வர்: ‘சாப்பாடு அறுவது ரூவா...கூட்டு,பொரியல்,ரசம் தீர்ந்துபோச்சு..அதனால அம்பது..எல(இலை) போடவா?’
சொல்லிவிட்டு ஒருஏளனப்பார்வை வீசிவிட்டு மீதமிருந்த ஒரு ஸ்டூலையும் தூக்கி போடும் சர்வர்.

ஸ்டூல ஏறக்குப்ப்பா...என்ற படி மகனை முறைக்கும் அப்பா...

‘ஓட்டலுக்கு பேரு வச்சா அம்பது லூவாய்க்கு தள்ளுராங்கலாம்...’முணுமுணுக்கும் அப்பாவின் காதோரம் வந்து மகன்...
“அப்பா...நமக்கு என் இந்த பொழப்பு...பேசாம என்னை நீ கவுருமென்ட் வாத்தியார் வேலைக்கு படிக்கவச்சிருக்கலாம்ல...அஞ்சி நா வேல(ஐந்து நாள் வேலை)ரெண்டு நா ஜல்சா...பொண்ணுங்கல தேடிலாம் பஸ் ஸ்டாண்டு,காய்கரிகடனு போகவேண்டாம்..நம்மகூடவே இருக்கும்க..அப்பறம்..காப்பரிச்ச,அரப்பரிச்ச...முளுப்பரிச்சைனு...கொடைக்கானலு,வால்ப்பாரை..அப்பறம்...ம்ம்ம்ம்..ஆ...வயநாடு கேரளால..

இப்போது அப்பா அவனைப்பார்த்து சிரிக்கிறார்...

அப்பன்: ‘மவனே...திருட்டுபயடா நீ..சோத்துக்கே வழி இல்லன்னாலும் மஜா கேக்குதுடா...’

மவன்: யோவ்..அப்பு ..நா சொல்ல வர விசயமே புரியல உனக்கு...நீ எப்பிடி என்னை படிக்கவச்சிருக்கணும்ன்னு நா நம்புனேன்...வுடு விடு...இன்னும் பாக்கி இருக்கு கேட்டுக்க...

சர்வர் திரும்ப வந்து பார்க்கும்போது இவர்களே ஸ்டூலை இறக்கிப்போட்டு இலையையும் போட்டு உக்காந்து இருக்கிறார்கள்.

சர்வர்: ‘முடிவு எடுத்துட்டிங்க...ஆனா கொஞ்சம் லேட்டா எடுத்துட்டிங்க...என்ன பண்றது...எதுமே நம்பகைல இல்லைல...’என சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

மவன்: “ஆளுக்கொரு பிலாசபிப்பா...நம்ப நாட்ட புடிச்ச பீட...இந்த பிளாசபியிசம்”

அப்பன்: மவனே...எட்டாவது வரைக்கும் படிச்ச...ரைட்டு...ரெம்ப பேசுறயே...எனக்கு தெரியாம ஏதும் ஒன்னு ரெண்டு புக்க படிச்சிட்டயோ...இசம் குசம்னுல்லாம் பேசறே...எனக்கு தெரிஞ்சதெல்லாம் ரசம்தான்...அதும் இல்லையிண்டான் இந்தப்பய...’

மவன்: அப்பனே...இப்ப இருக்குற உலகத்துல ‘தெர்ல’ னு மட்டும் சொல்லிராத...முட்டாப்பயன்னு சொல்லிருவாங்க..தெர்ல நா...”யா...ஐ நோ” “வில் தின்க்”இப்பிடி எதயாதும் சொல்லித்தொலயனும்...இல்லானா அட்டு லிஸ்ட்டு ஸ்மார்ட் போன் இருந்து தொலயனும்...

அப்பன்: தொலைஞ்சா...புது போன்லாம் வாங்க முடியாது மவனே....

தலையில் அடித்துக்கொண்டு இருக்கையில் சர்வர், இலையில் சோறு போட்டு புளிக்கொழம்பு ஊத்துகிறான்...

மவன்: சாம்பார் எங்கய்யா...

சர்வர்: அதன் பிலாசபி சொன்னேனே...எதுமே நம்ப கைல இல்லன்னு...ஓனருக்கு சாம்பாருன்னா “உசிரு”
(இந்த உசிரு மட்டும் அழுத்தமாய்)

அப்பன்: மவனே...எனக்கும் சாம்பார்னா உசுருடா..

மவன்: யோவ் சாம்பார்...சொல்லறத கேளுய்யா...வாத்தியார் வேல மட்டும் கெடச்சா...பொண்ணு தர ஓடி வருவாங்க...நூறு எரநூறு பவுன் போடுவாங்க...அதவுட மதிப்பு மரியாத...பத்துல ஒன்னு போனா ஒம்போதுன்னு நீ சொன்னாத்தான் நம்புவாங்கெ.
அவன் சொன்னதை அரைகுறையாய் கேட்டுவிட்டு அப்பா...

அப்பன்: “தம்பி....மோரு...”என சர்வரிடம் கேட்கிறார்.

மவன்: நகையா...பணமா குவியும்ப்பா...பட்ட கஷ்டம்லாம் இந்த சாம்பார் மாதி ஓடிரும்ப்பா.

அப்பன்: “இப்ப என்ன பண்ணனும்னு சொல்லவர்ற...”

மவன்: “பில்லு செட்டில் பண்ணு...சொல்றேன்..”

சர்வர் பில்லுடன் வர....
‘எவ்வலோப்பா...’ என அப்பன் கேக்க...

சர்வர் ”கொடுக்குறத கொடுங்க சார்...வெறும் சாப்பாடு...புளிக்கொலம்புதான சாப்டீங்க...”

அப்பன்: “தம்பி...இந்தியன் எகனாமி தெரியாம இப்பிடி படக்குன்னு சொல்றிங்க...இடம், பொருள் பாத்து சொல்லனும்ன்னா...நாங்க சாப்புட்ட சோறுக்கு விலை நீங்க வக்கிரதுதான் விலை ...மூணு நாலு மணிக்கு இந்த ஊருல எவன் சாப்பாடு போடறான்...நீங்க நினச்ச விலையை நீங்க வாங்கிக்கலாம் என்கிறதுதான் இந்திய எகானமி...அண்ட் குலோபளைசன்.(குளோபலைசேசன்)”
அப்படியே திரும்பி மகனிடம் “வாத்தியார் வேல...வேணுமா...இல்ல வாத்தியார்காரன் வசதி வேணுமா...வசதிதான வேணும்...இது ஒன்னும் பெரிய கம்ப சூத்திரமோ,கவர்மென்ட் பாங்க்ல லோன் வாங்குற விஷயம் மாதியோ கஷ்டமானது இல்ல...வேணும்னா எடுத்துக்கலாம்...

உடம்பை மிலிட்டிரிகாரன் மாதிரி வைத்து பேசுகிறார் அப்பா.

மவன்: ‘என்னாப்பு...பயங்கரமா பேசுற...’

அப்பன்: “அப்பன்டா நானு...”
(அடுத்த காட்சி --- அப்பனுக்கு தெரிஞ்ச ஒரு ‘அரசு’ வாத்தியார் வீட்டிற்கு திருட போகிறார்கள்.)அந்த வாத்தியார் சீலிங் பேன் கப்பின் உள்ளே நகைகளை மறைத்து வைத்துள்ள விஷயம் அப்பனுக்கு தெரியும்...

Comments

Popular posts from this blog

MISERY OF DEBT (கடன்-டிட் பிட்ஸ் )

Death Stories 1

சமத்து