குறுங்கதை:1
செந்திலுக்கு சொக்குவின் பேரில் கடுமையான கோவம்.சொக்கு வரட்டுமென்று அந்த ஓவல் டாப் கண்ணாடி உணவு மேசை மீது அமர்ந்து, அந்த இடைவெளியில் தனது முகநூல் பக்கத்தில் அந்த நடிகை தனது தொடைமேல் தனது இன்னொரு தொடைபோட்டு இருந்த புகைப்படத்தை பற்றிய தமிழக இளைஞர்களின் கருத்துக்களை படித்துக்கொண்டிருந்தான்.எல்லோருமே அந்த நிறத்தைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது.அதைவிட பெரும்பாலும் எல்லோரும் நிறத்தை சரியாகவே சொல்லி இருந்தனர்கள் என்பது பேராச்சர்யம்..ஒருவன் மட்டும் தான் ஆட்டுமந்தை இல்லை என நிரூபிக்க அது மஞ்சள் என்றான். செந்திலும் ஒருமுறை தன் இரு விரல்களால் விரித்துப்பார்த்து(தொடுதிரையை) மஞ்சள் என சொன்னவனை திட்டிக்கொண்டான்.அந்நேரம் வந்த சொக்குவிடம் மஞ்சள்காரன் மேலிருந்த கோவத்தை காட்டினான்.
இங்கே இருப்பது நானும் நீயும்.நீயோ ஆண்.நான் அதைவிட ஆண்.அப்படி இருக்கும்போது ஏன் அப்படி செய்தாய்?நாம் ஏற்கனவே பேசி வைத்துள்ளோம் அல்லவா...’நான் யார்’ என்பதை தேடும் விசப்பரிட்சையில் இந்த ஆறு மாதமும் இருக்கிறோம் என்ற நினைப்புகூட இல்லாமல் ஏன் அப்படி செய்தாய்?ஜனவரி ஒன்று பிறக்கும் முன்னேயும்,பிறந்த பின்பும் கத்தி கத்தி(இரைச்சல்) சொல்லப்படும் ‘ஹாப்பி நியூ இயர்’ போல நீ ஏன் அப்படி செய்தாய்?நியூ இயர் என சொல்லிக்கொள்ளாத ஒரு அழகான நியூ இயர் எப்போது பிறக்கும்?அன்றும் நீ இப்படித்தான் தடக் சத்தத்தை எழுப்பிக்கொண்டு இருப்பாயா நல்ல நாள் என்பதை மறந்துவிட்டு?அதிலும் நியூ இயர் பத்தி நாம் கூட முன்னமே பேசியிருக்கிறோம்.நினைவிருக்கிறதா....?எப்படி இருக்கும் உனக்கு.அன்று நீயும் அவர்களைப்போல,விசேச நாட்களில் மெசேஜ் பூஸ்டர் கார்டு எல்லாம் வேலைக்கு ஆகாது என கம்பேனிக்காரன் அனுப்பிய செய்தியின் அடிப்படையில் மெசேஜூக்கு இன்னைக்கு ஒரு ரூபாயாம்.அதற்க்கு காலே செய்துவிடலாமென சொல்லி மாங்கு மாங்கென மாங்கியன்வந்தானே நீ.
அதிருக்கட்டும் சொக்கு.அப்படி ‘தடக்’ என்ற சத்தம் வரும்படி ஏன் செய்தாய் சொக்கு...?என மீண்டும் மீண்டும் செந்தில் சொக்குவிடம் கேட்டுகொண்டே இருந்தான்.சம்பாசனை தொடர்ந்தது.ஒரு கட்டத்தில் சொக்கு கேட்கும்முன்னே செந்தில் முந்திக்கொண்டான்.நீ அதற்காகத்தான்(எதற்காக என்று தனியாக செந்திலிடம் கேட்டுக்கொள்ளுங்கள்) உள்ளே போய் அப்படி செய்தாய் என்றால் நான் பேச்சை இத்துடன் முடிக்கிறேன்.இல்லையென்றால் தொடர்கிறேன்.அதோடு நாம் ஒன்றும் ஹோமோசெக்ஸ்வலிஸ்டுகள் இல்லையே சொக்கு.then why you have done like this? என்றான்.
“அப்படி இருந்திருந்தால் நான் அப்படி செய்திருக்கவேமாட்டேனே...நீயும் என்கூடவேதானே இருந்திருப்பாய்...”என்றான் சொக்கு.மேலும் ஒரு மனிதன் தன் சுதந்திரத்தை உணர்வது அந்த ‘தடக்’ சத்ததில்தானே என்றெல்லாம் செந்திலுக்கு சொக்கு விளக்க ஆசைப்படவில்லை.
அப்போது செந்தில், தாங்கள் இருவர் மட்டுமே இருக்கையில் தான் எப்போதும் அப்படி ‘தடக்’ சத்தம் எழுப்புவதில்லை என்றான்.ஆனால் சொக்கு,அவன் அவ்வாறு செய்ததை தான் ஒருபோதும் கவனித்ததில்லை என்றான்.
இவ்வாறாக நடந்து முடிந்த அன்று மாலை கழிப்பறைக்குள் அது ஏதும்(?) இல்லாமல் சென்ற சொக்கு ‘தடக்’ என தாழ்ப்பாளை போடவில்லை.சொக்கு வரும்போது அங்கேயே உட்கார்ந்து இருக்கவேண்டாம் என நினைத்த செந்தில் ஹாலுக்கு சென்றான்.இப்போது செந்தில் மீண்டும் அந்த நடிகை படத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.இந்தமுறை தன் இரு விரல்களால் சுருக்கி...(மீண்டும் தொடுதிரையையே).சிறிதுநேரம் கழித்து அங்கே செந்தில் இல்லை என்பதை அறிந்த சொக்கு, மீண்டும் கழிப்பறையின் உள்ளே நுழைந்துவிட்டு இடக்கையில் கதவை அழுத்தி தள்ளிக்கொண்டு வலக்கையால் சத்தமான ஒரு தடக்.
Comments
Post a Comment