ஹெல்மெட்டுக்குள் எனக்கென தனி வீடு உள்ளது.அதில் பிடித்த பாடல் ஒன்று சத்தமாய் என்னால் இசைக்கப்படும்,
அந்த வீட்டின் சுவற்றினில் வேகமாக காற்றை ஊதி என்  வாய் நாற்றம் அறியப்படும்.
கருப்பு கண்ணாடி எனில் இன்னும் வசதி அதிகம்.சூழ்நிலைகேற்ப முகபாவனைகள் செய்யப்படும்.
கதவை லேசாக திறந்து மூக்கை நோண்டலாம்,நேத்து சிக்கிய மாம்பழ நாரை கடவாய் பல்லிளிருந்து எடுக்கலாம்.யாருக்கும் தெரியாது.
மழை நாட்களில் உள்ளே கும்மியே அடிக்கலாம்.
எதையோ மறந்து சடக் என முன்னால் நிற்பவன்,பறக்கும் தூசி,கார்ப்பரேஷன்,கழிவு நீர்,மெதுவாய் கொட்டையை சொரிந்துகொண்டு நடு ரோட்டில் ஓட்டும் டிவிஎஸ்காரன் என  நினைக்கும் அனைத்தையும் கெ(கொ)ட்ட வார்த்தைகளால் திட்டலாம்.இருட்டுக்குள் இருந்து கொண்டு விளக்கெரிந்து கொண்டிருக்கும் எதிர் வீட்டுக்காரனின்  பாத்ரூமை பார்ப்பது போல் அவ்வளவு ஒரு சுகம் மற்றும் பாதுகாப்பு அந்த வீடு.



Comments

Popular posts from this blog

MISERY OF DEBT (கடன்-டிட் பிட்ஸ் )

Death Stories 1

சமத்து